February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் வீட்டுக்கு அருகில் பெண்கள் போராட்டம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு 7 பகுதியில் பதற்றமான நிலைமை நிலவி வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தலைமையிலான குழுவினர், பிரதமரின் வீடு அமைந்துள்ள பகுதிக்குள் செல்ல முயற்சிப்பதால் அங்கு வீதியில் வீதித் தடைகளை போட்டு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரிக்கும் விலைவாசி, பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.