வர்த்தகர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது, அவர் சபாநாயகர் மகிந்த யாப்பா முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் இராஜினாமவை தொடர்ந்து வெற்றிடமாகிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டில் ஆசனத்திற்கே தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதனை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்தக்கொள்ளாமலேயே நிராகரிப்பதற்கு நேற்று உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.
இதனையடுத்து அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளதுடன், கூடிய விரைவில் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.