
File Photo
கொழும்பு – பேலியாகொடை மெனிங் சந்தைப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பேலியாகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வாரங்களாக கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.