January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் நெருக்கடியால் மட்டுப்படுத்தப்படும் பாராளுமன்ற அமர்வு!

இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வை இரண்டு நாட்களுக்குள் மட்டுப்படுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இன்றும், நாளையும் மாத்திரம் பாராளுமன்ற அமர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபை முதல்வரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய பாராளுமன்ற கூட்டங்களால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமையினால் இந்த வாரம் பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரிப்பதற்கு எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.