நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமைக்கு தற்போதைய பாராளுமன்ற கூட்டங்களால் எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று முதல் இந்தப் பாராளுமன்ற கூட்டத்தை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவித்தலை விடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாம் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி மக்களுடன் வீதிகளில் அமர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்த பாராளுமன்றத்தினால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருவார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கி வெளியேறி செல்வதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார தெரிவித்துள்ளார்.