எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாகவும் அத்துடன், அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்மானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியசாலை, மருந்தக சேவைகள் என்பனவும் அந்த வர்த்தமானி ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.