January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

21 ஆம் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது!

அரசாங்கத்தின் உத்தேச 21 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த திருத்த வரைபு இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தி, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையிலேயே 21 ஆவது திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கூடிய விரைவில் இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.