கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடையே பிக்கு ஒருவரும் நான்கு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ‘கோட்டா கோ கம’ பகுதியில் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று இரவு முதல் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்லும் அனைத்து நுழைவு வழிகளையும் மறித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியிருந்தது.
இந்நிலையில் இவர்கள் பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வீதியில் போக்குவரத்துகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக கூறி அதனுடன் தொடர்புடைய 21 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.