சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை வந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாகவே குறித்த குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
ஒருவாரம் இலங்கையில் தங்கியிருக்கும் அவர்கள், பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி நாட்டின் நிலைமைகள் தொடர்பில் அறிந்துகொள்ளவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கடந்த 7ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமையவே அந்தக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இன்று முற்பகல் அவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.