கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகே பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.
ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அங்கு பல நாட்களாக போராட்டம் நடத்தி வரும் குழுவினர், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்த பாதைகளையும் மூடி ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலையிலேயே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இன்றைய தினத்தில் தமது போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்லும் அனைத்து பாதைகளையும் மறைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதால், அங்கு விசேட அதிரடிப்படையினர், இராணுவம் என பெருந்திரலான பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.