January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வீட்டில் இருந்து வேலை’ முறை தனியார் துறைக்கும் அமுல்!

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தனியார் துறையினருக்கும் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையால் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை ஜுன் 20 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது.

இதேபோன்று தனியார் துறையினரும் பின்பற்றினால், நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையவர்கள் பணிக்கு செல்லக் கூடிய வகையில், அவர்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க முறைமைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.