January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று அறிவித்தல்!

ஜுன் 23 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே பெட்ரோல் விநியோகம் நடைபெறும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் 23 ஆம் திகதி பெட்ரோல் கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாகவும், அதன் பின்னர் பெட்ரோலை முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அவற்றின் இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் நாட்களை ஒதுக்கி பெட்ரோலை விநியோகிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது டீசல் விநியோகம் நடைபெற்று வருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.