பிரதமர் பதவியை மீண்டும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கே வழங்குமாறு அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெருக்கடியான நேரத்தில் அரசாங்கத்தை புதிய பிரதமரிடம் ஒப்படைத்த போதும், அவரால் எந்தப் பிரயோனமும் இல்லையென்றும் இதனால் மீண்டும் பதவியை தம்மிடமே ஒப்படைத்துவிடுமாறு அந்தக் கட்சி கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கடந்த தினங்களில் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.
69 இலட்சம் மக்களும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தை தெரிவு செய்துள்ள நிலையில், தற்போது கட்சி அரசாங்கத்தில் பின்னிலையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கட்சியினர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாளைய தினம் ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் குழுவொன்றுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளதாகவும், இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.