January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா நிதி உதவி!

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்தியாவினால் 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தத் துறைமுகத்தை துரிதமாக அவிருத்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று காங்கேசன்துறை துறைமுகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை விரைவில் அபிவிருத்தி செய்து இந்தியா – இலங்கை இடையே நேரடியாக கப்பல் சேவைகளை நடத்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.