
தொழில்சார் போக்குவரத்து வாகனங்களுக்கு கோட்டா (ஒதுக்கீடு) முறையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முச்சக்கர வண்டிகள், தனியார் பஸ்கள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று கொழும்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க வேண்டிய வாகனங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.