முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கு ஏற்பட்டிருந்த அமைதியின்மையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் வரிசையில் நின்ற போது, அங்கு இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, இராணுவத்தினர் தங்கள் மீது தாக்குல் நடத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அங்கு ஏற்பட்டிருந்த அமைதியின்மையை தொடர்ந்து இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.