யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பிக்கப்படும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற அமைச்சர், அங்கு விமான நிலையத்தை பார்வையிட்ட பின்னர் நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ். விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதால் புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.