January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். விமான நிலையம் – காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாணம் விமானநிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேரில் சென்று ஆராய்ந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் அமைச்சர் புகையிரதம் மூலம் இன்று காங்கேசன்துறைக்கு சென்றார்.

கொழும்பிலிருந்து புகையிரதத்தில் சென்ற இருவரும் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இறங்கினர்.

இதனை தொடர்ந்து பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சென்ற அமைச்சர், அங்கு அதன் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.