January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளை மூடுவது தொடர்பான கல்வி அமைச்சின் தீர்மானம்!

கொழும்பு நகரில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் அடுத்த வாரம் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேபோன்று நெருக்கடியான மற்றைய நகரங்களின் பாடசாலைகள் தொடர்பில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தீர்மானிக்க முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிராமிய பிரதேச பாடசாலைகளை நடத்திச் செல்ல முடியுமென்றால் அந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மூடப்படும் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.