இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் பெட்ரோலை கொள்வனவு செய்யவென 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நாணயக் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 3 இலட்சம் பீப்பாய்கள் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக எரிசக்தி மற்றும் மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாணயக் கடிதங்களை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இதனால் தற்போது நாட்டில் பெட்ரோலுக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மக்கள் வங்கியினால் இன்றைய தினத்தில் அந்த நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் வாரங்களில் பெட்ரொல் கப்பல் இலங்கை வரவுள்ளது.