January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய கடன் உதவியில் 50,000 மெட்ரிக் டொன் அரிசி!

Rice Common Image

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு தேவையான இந்திய கடன் உதவி நிதியை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக நாட்டில் ஏற்படக் கூடிய அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அரிசியை கூடிய விரைவில் இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.