இலங்கை முழுவதும் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை (ஜுன் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மற்றைய அரச நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் நடைமுறை நாளை முதல் அமுலாகவுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.