இலங்கை முழுவதும் தற்போது வரையில் 3500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உணவுப் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருவதாகவும் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பேக்கரிகள் மூடப்பட்டு வருவதாகவும், இந்த நிலைமையில் பாண், பணிஸ் விலைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.