இந்திய கடன் உதவியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள டீசலை ஏற்றிய இறுதி கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது.
இதன்படி 40,000 மெட்ரிக் டொன் டீசல் அந்தக் கப்பலில் இருந்து இறக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்வருட் நாட்களில் டீசல் விநியோகம் நடைபெறவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்த விநியோகம் நடைபெறவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அடுத்த பெட்ரோல் கப்பல் எப்போது வருமென்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும் மேலும் இந்திய கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பெட்ரோல் விநியோகம் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் நீண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.