January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனது 5 வயது மகனை களனி ஆற்றில் வீசிய தாய்!

கொழும்பு, மட்டக்குளிய – வத்தளைக்கு இடையிலான கதிரான பாலத்திற்கு அருகில் தாய் ஒருவர் தனது 5 வயது மகனை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகனை களனி ஆற்றில் வீசிவிட்டு அவரும் ஆற்றில் குதிக்க முற்பட்ட வேளையில் பிரதேசவாசிகளால் அந்தப் பெண் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஆற்றில் வீசப்பட்ட சிறுவனை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

படகுகள் மூலம் சிறுவனை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரையில் சிறுவன் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வத்தனை பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.