January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுபானம், சிகரெட் விலைகள் மேலும் உயர்வு!

மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளை மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தனோல் உள்ளிட்ட மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதில் நிலவும் சிக்கல்கள் காரணமாக மதுபான விலை பெருமளவுக்கு அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிவிசேட மதுபானம் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சிகரெட் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றின் விலைகள் சில வாரங்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன.