யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான திட்டத்தை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்தால் 2025இல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்றும் இதனால் 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.