January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன்றைய தினத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்படும் இடங்கள்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில், கொழும்ப உள்ளிட்ட பல பகுதிகளிலும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இதேவேளை எரிபொருள் இன்மையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும், எந்நேரத்திலும் எரிபொருள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பலரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இவ்வாறாக கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நிற்பதை காணக் கூடியதாக உள்ளது.

இந்நிலையில் இன்றைய தினத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.