November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டிச் செல்வோரே காட்டிக் கொடுக்கும் கடல் வழி ஆட்கடத்தல்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை தொடர்ந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அண்மைக் காலமாக இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சித்த பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, கடத்தல்காரர்களினால் தங்களை தேடி வரும் ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபா முதல் ஒரு மில்லியன் ரூபா வரை பணத்தை பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களை பாதுகாப்பாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கூட்டிச் செல்வதாக கூறிக்கொண்டு படகுகளில் அவர்கள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்பு படையினருக்கு படகில் செல்பவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

பணம் பறிக்கும் நோக்கில் திட்டமிட்டு செயற்படு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கும்பல்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அவ்வாறு இலகுவாக எவருக்கும் கடல்வழியாக செல்ல முடியாது என்றும், வீணாக கடத்தல் காரர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வதாகவும் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.