January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விலைவாசியில் பழைய நிலைக்குத் திரும்ப முடியுமா?: பிரதமர் பதில்

பொருட்களின் விலைவாசியில் மீண்டும் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு தொடக்கம் சவால்களை வெற்றிக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென்று எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உடன் சூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, நாட்டின் பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”நாங்கள் சரியான பாதையில் போனால் இந்த வருடம் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். ஆனால் 2024 ஆம் ஆண்டு முதல் எங்களுக்கு முன்னோக்கி செல்ல முடியுமாக இருக்கும். எப்படியும் 2023 ஆம் ஆண்டில் சிறிய முன்னேற்றத்தையும் காண முடியுமாக இருக்கும்” என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.