November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல வாய்ப்பு!

இலங்கையில் இருந்து அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லக் கூடிய வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போதுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது.

ஆனாலும் குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியம்,  சிரேட்டத்துவத்தும் உள்ளிட்ட விடயங்களால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்நிலையில், நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேட்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.