May 24, 2025 18:51:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அங்கம்பொர’ தற்காப்புக் கலையை மேம்படுத்த நடவடிக்கை!

இலங்கையின் பாரம்பரிய விளையாட்டாகவும், கலாச்சாரம் மற்றும் மரபுரிமையாகவும் காணப்படுகின்ற ‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலையை மேம்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பினும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதனால் அந்தக் கலையைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்காக விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.