நீதிமன்றத்தில் இணங்கியவாறு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி அவருக்கு 26 இலட்சம் ரூபா நிலுவை சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தத் தொகையை நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடையாக வழங்குவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்களுக்கு கருத்தடை செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.
எனினும் 2019 ஆம் ஆண்டில் குருநாகல் நீதிமன்றத்திற்கு அறிவித்த சீஐடியினர், அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, அவருக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு இணக்கம் வெளியிட்டிருந்தது.