November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்சார சபையின் தலைவர் பதவி விலகினார்!

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார்.

இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதன் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கோப் குழுவில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது, அந்தத் திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு மோடி அழுத்தம் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக பெர்டினாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஜனாதிபதி மறுத்த நிலையில், தான் வெளியிட்ட கருத்தை பெர்டினாண்டோ வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.