கோட்டாபய ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டுவந்தமை தொடர்பில் கவலையடைவதாக ‘வியத்மக’ எனும் புத்திஜீவிகள் அமைப்பின் ஸ்தாபகரான பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தான் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘வியத்மக’ அமைப்பின் ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டார்.
ஆனால் கோட்டாபய பதவிக்கு வரும் போது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இதன்மூலம் தோல்வியடைந்த ஆட்சியாளராக அவர் மாறியுள்ளதாகவும் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து கூறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாலக கொடஹேவா, இன்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.