அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நாட்களில் விடுமுறை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்தில் இருந்து இதனை நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் அவர்கள் ஏதாவது பயிர் செய்கையை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த விடுமுறையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.