வர்த்தகர் தம்மிக பெரேராவுக்கு எதிராக அவரின் வீட்டுக்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தம்மிக்க பெரோவினால் செலுத்தப்படாது இருக்கும் வரிகளை செலுத்தமாறு கோரி, சிவில் அமைப்புகளை சேர்ந்தோரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது உங்களால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோசத்தை எழுப்பினர்.
பஸில் ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் வெற்றிடமாகியுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்திற்கு தம்மிக்க பெரேராவை நியமிக்க அந்தக் கட்சியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அந்தக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவும் அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி அவர் எதிர்வரும் நாட்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலைமையிலேயே அவருக்கு எதிராக இன்று அவரின் கொழும்பில் உள்ள வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.