சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 36 பேர் தென்கிழக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைதாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான படகை கண்டுள்ள கடற்படையினர் அதனை இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 6 சிறுவர்கள் 6 பெண்கள் உட்பட 36 பேர் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கிலேயே அந்தப் படகில் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளடங்குறார்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர் .மேலும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை பாணமை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, வாழைச்சேனை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.