November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விநியோகத்திற்கு அறிமுகமாகும் புதிய முறை!

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நுகர்வோருக்கு ஒதுக்கீட்டு முறையில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜுலை முதலாம் திகதி முதல் இந்த முறைமையை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ”இலங்கையில் நிதி நிலைமையை வலுப்படுத்தி 24 மணி நேர மின்சாரம் மற்றும் நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வரையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு வாராந்தம் குறிப்பிட்ட அளவு எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் முறையை ஜூலை முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.