இலங்கை கடற்பரப்பில் சமையல் எரிவாயு கப்பலொன்று நங்கூரமிட்டுள்ள போதும், அந்தக் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் நான்கு நாட்களுக்கும் மேலாக அந்தக் கப்பல் கொழும்பை அண்மித்த கடல்பரப்பில் நிற்கின்றது.
3,900 மெட்ரிக் டொன் எரிவாயு அந்தக் கப்பலில் இருப்பதாக கூறப்படுகின்றது.
இதற்காக 2.5 மில்லியன் டொலர்களை செலுத்த முடியாத காரணத்தினால் அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தேவையான டொலரை பெற்று அதிலுள்ள எரிவாயுவை இறக்கும் வரையில் சந்தைக்கு எரிவாயு விநியோகம் நடைபெறாது என்று கூறப்படுகின்றது.
இதனால் தங்களால் அறிவிக்கப்படும் வரையில் எரிவாயுக்காக வீதிகளில் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.