ஜுன் 13 ஆம் திகதியை விசேட விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவும் போக்குவரத்து சிரமங்களையும், மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச அலுவலகங்களைக் கொண்டு நடத்த எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள 14 ஆம் திகதிக்கு முதல் நாளான 13 ஆம் திகதியை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவித்துள்ளதாக சுற்றுநிருபமொன்றை வெளியிட்டு பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அன்றைய தினத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.