பத்தரமுல்லை, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது மாணவர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
இவ்வேளையில் அங்கிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்கள் நோக்கி கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.