வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், பீரிஸ் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒருவரின் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸுக்கு உத்தியோகபூர்வ மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது.
இதேவேளை ஜூன் 13ஆம் திகதி சிங்கப்பூரின் துணைப் பிரதமராக பதவியேற்கவிருக்கும் நிதி அமைச்சர் லோரன்ஸ் வோங்கையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்துள்ளார்.
சிங்கப்பூர் தரப்புடனான கலந்துரையாடலின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து அமைச்சர் பீரஸ் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதன்போது இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும், சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அவர் உதவி கோரியுள்ளார்.
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவையும் அமைச்சர் கோரியுள்ளார்.
இதன்போது, இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.