முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து அவரின் ஆசனத்திற்கு இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இதன்படி தம்மிக்க பெரேராவை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவுள்ளார்.
இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிதாக இரண்டு அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ள.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைச்சுப் பதவிகளுக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.