நீதவான் முன்னிலையில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தன்னை கைது செய்வதற்கு தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவரை, இன்று இரவு 8 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதுவரை அவரை கைது செய்வதற்கான பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்ததது.
அதன்படி இன்று மாலை, மஹரகமவில் உள்ள கோட்டை நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவர் முன்னால் ஆஜராகியுள்ளார்.
அதன்போது, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.