இலங்கையில் முகக் கவசம் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி உள்ளக செயற்பாடுகளின் போதும் மற்றும் பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
ஜுன் 10 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை சுகாதார அமைச்சு சட்டமாக்கியிருந்தது.
எனினும் தற்போது தடுப்பூசிகள் மூலம் கொவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், முகக் கவசம் தொடர்பாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.