முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இன்று முற்பகல் அவர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை கையளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பஸில் ராஜபக்ஷ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, அது தொடர்பில் அறிவித்துள்ளார்.
இதன்போது தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இனி அரச நிருவாக விடயங்களில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.