File Photo
அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று – பள்ளக்காடு பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் 6 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரமொன்றின் கீழ் குழந்தையை உறங்க வைத்துவிட்டு தாயும், தந்தையும் அருகில் உள்ள மாட்டுப் பட்டியொன்றில் வேலை செய்துகொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த யானை குழந்தையை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.