புதன்கிழமை நள்ளிரவு முதல் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இவர்கள் போராட்டம் முன்னெடுத்தக் காலப்பகுதியில் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டிருந்தது.
தற்போது கட்டம் கட்டமாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பி வருகின்றது.
மின்சார கொள்வனவின் போது, நிலவும் போட்டித்தன்மையை இல்லாதொழித்து மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பான சட்டமூலம் இன்றை தினம் பாராளுமன்றத்தில் சம்பிக்கப்படவுள் நிலையில், அதனை சமர்பிக்கக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இவர்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து நேற்று இரவு ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.