November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொட்டுக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இவரா?

Photo: Facebook/dhammika perera

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்‌ஷ பதவி விலகியதும், அந்த ஆசனத்திற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஸில் ராஜபக்‌ஷ, நாளை தினம் தனது பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு நியமிக்கப்படவுள்ள தம்மிக்க பெரேராவுக்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிக்க கட்சிக்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசியல் தகவல் வெளியாகியுள்ளன.